வெளியீட்டுக்கு முன்னரே வசூலை அள்ளிக் குவித்த ‘லியோ’

வெளியீட்டுக்கு முன்னரே வசூலை அள்ளிக் குவித்த ‘லியோ’

2 mins read
d939e590-9462-4e3c-8de0-1a5bc2a2c24b
நடிகர் விஜய். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் லியோ. இந்த ஆண்டு தமிழ் திரைப்பட ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

இப்படத்திற்காக விஜய் 125 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. 7 ஸ்கிரீன் நிறுவனத்தின் லலித் குமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், லியோ திரைப்படம் எந்தெந்த இடங்களில் எவ்வளவுக்கு விற்பனை ஆகியுள்ளது, எத்தனை கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் ஊடகங்களில் கசிந்துள்ளன.

அதன்படி, தமிழ்நாடு உரிமை ரூ. 90 கோடி, வெளிநாட்டு உரிமை ரூ.55 கோடி, கேரளா உரிமை ரூ. 15 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உரிமை ரூ.20 கோடி, கர்நாடகா ரூ.12 கோடி, ஹிந்தி சாட்டிலைட் உரிமை ரூ. 22 கோடி, ஹிந்தி திரையரங்க உரிமை ரூ.10 கோடி, ஆடியோ உரிமை ரூ. 15 கோடி, சாட்டிலைட் உரிமை ரூ.70 கோடி [சன் டிவி], டிஜிட்டல் உரிமை ரூ.125 கோடி [நெட்ஃபிளிக்ஸ்] எனத் தெரிகிறது.

மொத்தத்தில், வெளியீடு காண்பதற்கு முன்னரே லியோ திரைப்படம் ரூ.434 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், வெளியீட்டுக்குப் பின்னர் 125 கோடி ரூபாய் கூடுதலாக வசூலாகும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்