பிரபாஸ்: தீபிகாவைப் பார்த்தாலே உற்சாகம் பொங்கும்

பிரபாஸ்: தீபிகாவைப் பார்த்தாலே உற்சாகம் பொங்கும்

1 mins read
0c05cb14-1e4f-468d-8334-de1a79553dc7
தீபிகா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இந்தியத் திரையுலக நாயகிகளில் முதல் நிலைநட்சத்திரம் என்றால் அது தீபிகா படுகோன்தான் என்கிறார் ‘பாகுபலி’ புகழ் பிரபாஸ்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புதுப் படம் ‘கல்கி 2989 ஏடி’. இதில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிவியலும் கற்பனையும் மிகுந்த படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது தீபிகாவுடன் நடித்த அனுபவம் குறித்து பிரபாசிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பிரபாஸ், “தீபிகா அழகானவர் மட்டுமல்ல, அவர் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்,” என்றார்.

தீபிகாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்றும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற கனவு நனவானதில் மகிழ்ச்சி என்றும் பிரபாஸ் குறிப்பிட்டார்.

“தீபிகா படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்தாலே போதும், அங்கிருக்கும் அனைவருக்கும் புதிய தெம்பு கிடைத்தது போல் உற்சாகமாக இருக்கும். “படத்தில் அவருக்கு மிக முக்கிய கதாபாத்திரம் அமைந்துள்ளது. படத்தின் வெற்றிக்கு இக்கதாபாத்திரம் முக்கியப் பங்களிப்பை தரும்,” என்கிறார் பிரபாஸ்.

குறிப்புச் சொற்கள்