விஜயுடன் இணைகிறார் தனுஷ்

1 mins read
06e5ecc2-fdf4-40f2-bd63-ecce23191857
விஜய்யின் லியோ படத்தில் தனுஷ் நடிப்பார் எனத் தெரிகிறது - இந்திய ஊடகம்

விஜய்யின் லியோ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தனுஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இவர்களுடன் பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இப்படத்தில் இணைந்துள்ளார். அவரின் காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்படவுள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகர்களின் பெயர் இதில் சேர்ந்து வருகிறது.

ஆனால், தனுஷ் நடிப்பது வதந்திதான் என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில் இது வதந்தி தானா அல்லது லோகேஷ் கனகராஜ் வழக்கம்போல் வைக்கும் சஸ்பென்ஸ் கேரக்டர் தனுஷ்தானா என்பது இனிவரும் நாட்களில் தான் தெரியும்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி