'மல்டிபிளக்ஸ்' திரையரங்கைத் தொடங்கும் சிவகார்த்திகேயன்

1 mins read
e4d6e64c-a155-4653-b7a4-e3210fdc0601
-

'ஏசியன் சினிமாஸ்' என்ற நிறுவனம் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களைக் கட்டி திறந்து வருகிறது. மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுன் ஆகியோரது பெயரில் 'மல்டிபிளக்ஸ்' தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்து ஏசியன் சினிமாஸ் நிறுவனம் சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மல்டிபிளக்ஸ் தியேட்டரை கட்டப்போகிறது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற அல்லு அர்ஜுனின் எஎஎ மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறப்புவிழாவின்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் நரங் தெரிவித்தார். தமிழ் சினிமாவில் தற்போது சென்னையில் எந்த ஒரு நடிகருக்கும் சொந்தமாக தியேட்டர்கள் கிடையாது. நடிகராகவும் தயாரிப்பாளராகவும் உள்ள சிவகார்த்திகேயன் முதல்முறையாக தியேட்டர் தொழிலில் இறங்க உள்ளார்.

, :

தமி­ழ­கத்  