திரைப்பட கதாநாயகியாக மாறிய சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள்

2 mins read
474e9794-f83a-4bd0-ad17-209300a489a6
-

ஒரு காலத்­தில் தமி­ழ­கத்­தி­லும் கர்­நா­ட­கா­வி­லும் சந்­த­னக்­க­டத்­தல் வீரப்­பன் தொடர்­பாக ஏதே­னும் பர­ப­ரப்­பான செய்­தி­கள் வெளி­யான வண்­ணம் இருக்­கும்.

அவர் அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரால் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­தும் வீரப்­ப­னின் கூட்­டா­ளி­கள் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­தும் தனிக்­கதை.

இந்­நி­லை­யில் வீரப்­ப­னின் வாழ்க்­கையை மைய­மாக வைத்து உரு­வாகி உள்­ளது 'மாவீ­ரன் பிள்ளை' திரைப்­ப­டம்.

கே.என்.ஆர் மூவிஸ் சார்­பில் கே.என்.ஆர் ராஜா என்­ப­வர் தயா­ரித்து, அவரே கதா­நா­ய­க­னாக நடித்து இயக்­கி­யுள்ள படம் இது.

இதில் கதா­நா­ய­கி­யாக நடிப்­ப­தன் மூலம் மறைந்த வீரப்­ப­னின் மகள் விஜ­ய­லட்­சுமி திரை­யு­ல­கில் அடி எடுத்து வைத்­துள்­ளார். நடி­கர் ராதா­ரவி தெருக்­கூத்­துக் கலை­ஞ­ராக நடித்­துள்­ளார்.

இப்­ப­டம் மிக விரை­வில் திரை­காண உள்ள நிலை­யில், படத்­தில் நடித்­தது தொடர்­பான தமது அனு­ப­வங்­களை ஒரு பேட்­டி­யில் பகிர்ந்­துள்­ளார் வீரப்­பன் மகள் விஜ­ய­லட்­சுமி.

"அப்­பா­வின் மறை­வுக்­குப் பிறகு பல்­வேறு சோத­னை­களை எதிர்­கொண்­டோம். இப்­போது ஓர­ள­வுக்கு நன்­றாக இருக்­கி­றோம்.

"எனி­னும், இந்த வார்த்­தை­க­ளைச் சொல்ல பல ஆண்­டு­கள் தொடர் போராட்­டங்­களைச் சந்திக்க வேண்­டி­யி­ருந்­தது. இன்று ஓர­ளவு அமை­தி­யான வாழ்க்­கையை வாழ முடி­கிறது.

"ஒரு கட்­டத்­தில் நமக்கு அடிப்­ப­டைக் கல்வி கூட கிடைக்­குமா என்ற சந்­தே­கம்­கூ­கட இருந்­தது. என்­னை­யும் என் சகோ­த­ரி­யை­யும் நல்­ல­வி­த­மாக வளர்த்து ஆளாக்கி உள்­ளார் அம்மா. அதற்­காக அவர் பட்­ட­பாடு கொஞ்ச நஞ்­ச­மல்ல," என்று தனது தாயார் குறித்து நெகிழ்ந்து­போ­கி­றார் விஜ­ய­லட்­சுமி.

இவர் ஆங்­கில இலக்­கி­யத்­தில் இளங்­கலை பட்­டம் பெற்­றுள்­ளாராம். திரு­ம­ண­மாகி இரண்டு குழந்­தை­களும் உள்­ள­னர்.

வழக்­க­றி­ஞ­ராக வேண்­டும் என்­ப­து­தான் விஜ­ய­லட்­சு­மி­யின் லட்­சி­ய­மாம். அதற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளார்.

"அம்மா சமூ­கம், அர­சி­யல் சார்ந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளார். இப்­போது நானும் அவரு­டன் இணைந்­துள்­ளேன்.

"சிறு வய­தி­லேயே திரைத்­துறை மீது ஆர்­வம் ஏற்­பட்­டது. ஆனால் படிப்பு கெட்­டு­வி­டக்­கூடாது என்­ப­தில் அம்மா கவ­ன­மாக இருந்­தார்.

"நம் சமூ­கத்­தில் ஒரு பக்­கம் மது­வால் மக்­கள் சீர­ழி­கின்­ற­னர். இன்­னொரு பக்­கம் காதல் என்­கிற பெய­ரில் பெண்­கள் சீர­ழிக்­கப்­ப­டு­கி­றார்­கள். இப்­படி சமூ­கத்­தில் உள்ள சிக்­கல்­களை அல­சும் படம் இது. சமூகத்தில் நிலவும் அநியாயங்களை எதிர்த்து நிற்கும் பெண்ணாக நடித்துள்ளேன்.

"ஒற்றை மனுசியாக எங்களைக் கரை சேர்க்க அம்மா மிகவும் சிரமப்பட்டார்," என்கிறார் விஜயலட்சுமி.