கன்னட 'சூப்பர் ஸ்டார்' காலமானார்

2 mins read
e76971e9-e5a3-4049-870e-43c6bbe1453a
-

கன்­னடத் திரை உல­கின் சூப்­பர் ஸ்டார் புனித் ராஜ்­கு­மார் மார­டைப்பு ஏற்­பட்ட நிலை­யில் பெங்­க­ளூ­ரு­வில் உள்ள விக்­ரம் மருத்­து­வ­ம­னை­யில் நேற்று காலை 11.30 மணி­ய­ள­வில் அனு­ம­திக்­கப்­பட்­டார். அவர் சிகிச்­சைப் பல­னின்றி கால­மா­னார். அவ­ருக்கு வயது 46.

புனித் ராஜ்­கு­மா­ரின் அண்­ண­னான சிவ­ராஜ்­கு­மார் நடித்­துள்ள

'பஜ்­ராங்கி 2' என்ற படம் நேற்­று­தான் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­னது.

அண்­ணன் படத்­திற்­காக 7 மணி நேரத்திற்கு முன்பு காலையில் டுவிட்­ட­ரில் வாழ்த்து தெரி­வித்­த­வர் மதி­யம் இல்லை என்­பது சினிமா ரசி­கர்­

க­ளுக்கு பெரும் அதிர்ச்சி­யாக உள்­ளது. இரு தினங்­க­ளுக்கு முன்பு அப்­ப­டத்­திற்­காக நடை­பெற்ற விழா ஒன்­றில் புனித் கலந்து கொண்டு சிறப்­பித்­தார்.

கடைசியாக 'யுவரத்னா' என்ற படத்தில் சாயிஷாவுடன் நடித்திருந்தார். 'புட்டபொம்மா' பாடலைப் போலவே இருக்கும் அந்தப் படத்தின் ஒரு பாடல் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.

சண்டை, நடனம் இரண்டிலும் புனித் சிறப்பாக செய்யக்கூடியவர். 'ஜேம்ஸ்', 'த்வித்வா' என இரண்டு படங்கள் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியாகக் காத்திருக் கின்றன.

'நாடோடிகள்', 'போராளி', 'இவன் வேற மாதிரி', 'பூஜை' ஆகிய தமிழ் படங்களின் கன்னட மறுபதிப்பில் புனித் நடித்திருக்கிறார். 'போராளி' படத்தின் கன்னட மறுபதிப்பை சமுத்திரக்கனியே இயக்கியது குறிப்பிடத் தக்கது. தொடர்ந்து, தமிழ்த் திரையுலகை கவனித்தும் தமிழ் இயக்குநர்களுடன் நல்ல நட்பு பாராட்டியும் வந்திருக்கிறார் புனித். இவரது அப்பா பெயரில் இவர் நடித்த 'ராஜ்குமாரா' என்ற படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

2016ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் சன்டெக் சிட்டியில் நடந்த 'சைமா' விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கன்னட திரையின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் புனித் ராஜ்குமார்.

அவ­ரது மறைவு கன்­ன­டத் திரை­

யுகினரை மட்­டு­மல்லாமல் இந்­தி­யத் திரை­உல­கையே அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்­ளது.