'இயக்குநரே ஏமாற்றிவிடாதே'

'இயக்குநரே ஏமாற்றிவிடாதே'

2 mins read
c5d01963-6ab1-4d8d-a6d9-fa1c19e6dcec
படம்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

நயன்தாராவின் பிறந்தநாள் அன்று விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அந்த செயு்தியைப் பார்த்த நயனின் ரசிகர்கள், "அன்பான இயக்குநரே! நயனை விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள். அவரை ஏமாற்றிவிடாதே," என்று வேண்டுகோள் விடுத்தனர்.

"தயவுசெய்து தலைவியை விரைவாகத் திருமணம் செய்து கொள்ளுங்கள் அன்பான இயக்குநரே! காதல் அலுத்துப்போகும்போதுதான் கல்யாணம் என்று நீங்கள் சொன்னதை நாங்கள் மறக்கவில்லை. 5 ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

"தலைவியை காதலிப்பது அலுப்பாக இருக்காது. அதற்காக இப்படியே இருந்துவிடுவீர்களா? நயன்தாரா, நிறைய கஷ்டப்பட்டுவிட்டார். இந்தக் காதலும் தோல்வியில் முடிந்துவிடக்கூடாது. உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் தாலி கட்டிவிட்டால் நன்றாக இருக்கும். ஏன் ஐயா எங்கள் வயற்றெரிச்சலைக் கிளப்புகிறீர்கள்? தலைவியை எப்பொழுதுதான் திருமணம் செய்துகொள்வீர்கள்," என்று பதில் டுவிட் செய்திருக்கின்றனர். அந்த அளவிற்கு நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்ற கவலையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

நயன்தாராவின் பிறந்தநாள் அன்று அவருக்கு அன்புப் பரிசாக அவரை வைத்து இயக்கும் 'நெற்றிக்கண்' படத்தின் முன்னோட்டக் காட்சியை வெளியிட்டார் விக்னேஷ் சிவன். அந்தக் காட்சியைப் பார்க்கும்போது நயன்தாரா நடித்திருந்த 'இமைக்கா நொடிகள்' படம் நினைவுக்கு வந்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.

நயன்தாராவின் வாழ்க்கை வெற்றிப் பாதையில் மட்டும் செல்லவில்லை. அவர் பல சர்ச்சைகளில் சிக்கி அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். ஆனால் வாழ்க்கையில் எந்தப் பிரச்சினை வந்தாலும் அதைப் பார்த்து பயந்துவிடாமல் தைரியமாக எதிர்கொள்ளும் நயன்தாராவின் குணம் பலருக்கும் பிடித்துள்ளது.