எஸ்.பி சரண்: 'வரும் திங்கட்கிழமையன்று நல்ல செய்தி வரும்'

எஸ்.பி சரண்: 'வரும் திங்கட்கிழமையன்று நல்ல செய்தி வரும்'

1 mins read
648117fd-42e1-4a67-a5ae-6976c2150bde
-
Google News Preferred Icon

கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீரடைந்து வருவதாக அவரது மகன் எஸ்.பி சரண் தெரிவித்திருக்கிறார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கியிருக்கும் திரு பாலசுப்ரமணியத்திற்கு முழுமையாக நினைவு திரும்பியிருப்பதாகவும் பிறா் பேசுவதை உணா்ந்து பதிலளிப்பதாகவும் அவர் தங்கியிருக்கு மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

"எஸ்.பி.பி.யின் உடல்நிலை நான்காவது நாளாக சீராக இருப்பதாக அறிகிறோம். அவரது உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்" என்று திரு சரண், தமது சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றின் வழியாகத் தெரிவித்தார்.

மருத்துவமனையில் கடந்த மாதம் 5ஆம் தேதியன்று சேர்க்கப்பட்ட திரு பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில் அவர் இந்நோய்க்குப் பலியானதாக இந்திய ஊடகங்கள் சில தவறுதலாக செய்தி வெளியிட்டன.

Hashtags: #SPBalasubrahmanyam #coronavirus

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்