வைபவ் நாயகனாக நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார் பார்வதி நாயர். படத்துக்கு 'ஆலம்பனா' என்று தலைப்பு வைத்துள்ளனர். குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்துள்ள அலாவுதீன் கதைகளைப் போல வித்தியாசமான கதையுடன் இப்படம் உருவாகிறது. இதை பாரி கே.விஜய் இயக்குகிறார்.
நாயகன் வைபவ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் இது.
முனிஸ்காந்த், திண்டுக்கல் ஐ. லியோனி, காளி வெங்கட், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி இசைஅமைக்கிறார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் உருவாகும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் பார்வதி. மேலும் தமிழில் இப்போதுதான் தாம் எதிர்பார்த்த வாய்ப்புகளும் நல்ல கதைகளும் தேடி வருவதாகச் சொல்கிறார்.

