'சண்டிமுனி' படப்பிடிப்பில் சாமியாடிய மனிஷா யாதவ்

'சண்டிமுனி' படப்பிடிப்பில் சாமியாடிய மனிஷா யாதவ்

1 mins read
58148c1e-be55-424f-ae7f-73f5f4dabf1e
-
Google News Preferred Icon

ஒளிப்பதிவாளர் நட்ராஜ் கதாநாயகனாக நடிக்க, டி.சிவராம்குமார் தயாரிக்கும் 'சண்டி முனி' படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக மனிஷா யாதவும் முக்கிய வேடத்தில் யோகிபாபுவும் நடிக்கின்றனர். மில்கா செல்வகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இந்தப் படத்துக்காக சென்னை வளசர வாக்கம் பகுதியில் முனீஸ்வரன் கோவில் அரங்கும் 30 அடி உயரத்தில் முனீஸ்வரன் சிலையும் அமைக்கப்பட்டது. அந்தச் சிலை முன்பு கதாநாயகி மனிஷா சாமி ஆடிய காட்சி படமாக்கப்பட்டது. படம் குறித்து இயக்குநர் மில்கா செல்வகுமார் கூறுகையில், "நட்ராஜ்-மனிஷா யாதவ் இருவரும் காதலர்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நிலையில் நட்ராஜுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அப்பிரச்சினையில் இருந்து அவர் மீளவும் திருமணம் நடைபெறவும் வேண்டி குலதெய்வ வழிபாட்டை நடத்துகின்றனர். அப்போது மனிஷாவுக்கு அருள் வந்து சாமியாடுகிறார். பழனி, கொடைக்கானல், நெய்க்காரன்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துவருகிறது," என்றார். படங்கள், செய்திகள்: தமிழகத் தகவல் சாதனம்.