'பரியேறும் பெருமாள்', '96' படங்கள் சிறந்த படங்களாகத் தேர்வு

'பரியேறும் பெருமாள்', '96' படங்கள் சிறந்த படங்களாகத் தேர்வு

1 mins read
a03f3dca-f557-4c1a-a07a-ac5d866d0af0
-
Google News Preferred Icon

சென்னை அனைத்துலக திரைப் பட விழாவில் 'பரியேறும் பெருமாள்', '96' ஆகிய இரண்டு படங்களும் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டன. சென்னையில் 16வது அனைத் துலக திரைப்படவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. 'இந்தோசினி அப்ரிசியே ஷன் பவுண்டே ஷன்' சார்பில் கடந்த 8 நாட்களாக நடந்த இந்த திரைப்பட விழாவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 150க்கும் அதிகமான திரைப்படங்கள் திரை யிடப்பட்டன.

சென்னையில் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, தாகூர் திரைப்பட மையம், ரஷ்யக் கலாசார மையம் ஆகிய ஆறு திரை அரங்குகளில் படங்கள் திரை யிடப்பட்டன. இதன் நிறைவு விழா வியாழன் மாலை நடை பெற்றது. அமைச்சர் கடம்பூர் ராஜூ இந்த விழாவில் கலந்து கொண்டு சிறந்த படங்களுக்குப் பரிசுகளை அளித்தார். சிறந்த தமிழ்ப் படங்கள் வரிசையில் '96', 'அபியும் அனுவும்', 'அண்ணனுக்கு ஜே', 'ஜீனியஸ்', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'இரும்புத்திரை', 'கடைக்குட்டி சிங்கம்', 'மெர்குரி', 'பரியேறும் பெருமாள்', 'ராட்சசன்', 'வட சென்னை', 'வேலைக்காரன்' ஆகிய 12 படங்கள் திரையிடப் பட்டன. சிறப்புத் திரையீடாக 'மேற்கு தொடர்ச்சி மலை' திரையிடப்பட்டது.

அவற்றில் 'பரியேறும் பெரு மாள்', '96' ஆகியவை சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப் பட்டன. 'பரியேறும் பெருமாள்' படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் துக்கு ரூ.1 லட்சமும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ரூ.2 லட்சமும் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன், பிரேம்குமார்.