ஷாருக்கான்: மகன்களின் தலையை வெட்டுவேன்

ஷாருக்கான்: மகன்களின் தலையை வெட்டுவேன்

1 mins read
0cc6bf4f-4fa4-4e1e-8af7-cd94353ce646
-
Google News Preferred Icon

பெண்களுக்கு மரியாதை கொடுக்காவிட்டால் உங்கள் தலையை வெட்டிவிடுவேன் என்று மகன்களிடம் ஷாருக்கான் எச்சரிக்கை செய்துள்ளார். பெண்களுக்கு எப்போதும் மரியாதை கொடுக்கவேண்டும் என வலியுறுத்தி வரும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அதனையே தனது பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்து வளர்த்து வருகிறார்.

"எந்தப் பெண்ணையும் காயப் படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் உங்கள் தலையை வெட்டுவேன்," என நான் என் மகன்கள் ஆர்யன், ஆப்ராமிடம் தெரிவித்துள்ளேன். "எந்தப் பெண்ணையும் வா, போ என்று மரியாதை இல்லாமல் பேசக்கூடாது. யாராக இருந்தாலும் மரியாதையுடன் வாங்க, போங்க என்றுதான் பேசவேண்டும்," என என் மூத்த மகன் ஆர்யனிடம் தெரிவித்துள்ளேன்.