‘அருந்ததி’யாக மாறும் ஸ்ரீலீலா

‘அருந்ததி’யாக மாறும் ஸ்ரீலீலா

1 mins read
e6b35abf-8d21-4659-8633-ceebe36866b9
ஸ்ரீலீலா, அனுஷ்கா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

நீங்கள் அனுஷ்காவின் ரசிகர் என்றால், ‘அருந்ததி’ படத்தை மறக்க முடியாது. அவரது திரைப்பயணத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் அது.

தற்போது ‘அருந்ததி’யை இந்தியில் மறுபதிப்பு செய்யப் போகிறார் இயக்குநர் மோகன் ராஜா.

கதை, திரைக்கதையில் இந்தி ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்திருப்பதாகத் தகவல்.

‘அருந்ததி’ படத்தை தமிழில் நேரடியாக மொழிமாற்றம் செய்து வெளியிட்டபோதும் ரசிகர்கள் பேராதரவு அளித்தனர்.

தற்போது இந்தி மறுபதிப்பில் அனுஷ்கா பாத்திரத்தில் நடிக்கும் துணிச்சல் யாருக்கு உள்ளது என்பதுதான் உங்கள் கேள்வி என்றால், அதற்கான பதில், ஸ்ரீலீலா என்கிறார்கள் படக்குழுவினர்.

குறிப்புச் சொற்கள்