புகைபிடிக்கும் காட்சி: ஷ்ருதி ஹாசன் எடுத்த முடிவு

புகைபிடிக்கும் காட்சி: ஷ்ருதி ஹாசன் எடுத்த முடிவு

1 mins read
42c466e6-a328-4dd7-b29c-d859ccf58d88
ஷ்ருதிஹாசன். - படம்: பீக்பிஎக்ஸ்
Google News Preferred Icon

இப்போதெல்லாம் மிக சாந்தமாகவும் குழப்பம் இன்றியும் காணப்படுகிறார் ஷ்ருதி ஹாசன்.

கடந்த கால ஏமாற்றங்கள், சிக்கல்கள் தன்னைப் பக்குவமான பெண்ணாக மாற்றிவிட்டதாக நெருக்கமானவர்களிடம் கூறுகிறாராம்.

தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்தில் ஷ்ருதியும் இணைந்துள்ளார். அந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் மிக வலுவானதாக அமைந்திருக்குமாம்.

படத்தில் இவர் புகைபிடிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து ஷ்ருதிக்கு நெருக்கமானவர்கள் வெவ்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்தபோது, எந்தக் குழப்பத்துக்கும் இடம்கொடுக்காத வகையில் ஷ்ருதியே நன்கு யோசித்து ஒரு முடிவு எடுத்துள்ளார்.

அந்தக் காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், படத்தில் அது இடம்பெறுமா என்பது ஷ்ருதி எடுத்துள்ள முடிவைப் பொறுத்து அமையுமாம்.

இதனிடையே, அவர் நடித்து முடித்திருக்கும் ஆங்கிலப் படமான ‘தி ஐ’ படத்தை விரைவில் திரைக்குக் கொண்டு வருகிறார்கள்.

இப்போது ‘பவழ மல்லி’ பாடலின் வெற்றியாலும் உற்சாகமாகி இருக்கிறார் ஷ்ருதி. இதே வேகத்தில் அவரது இசையில் உருவாகியுள்ள ஆங்கிலப் பாடல் ஒன்றையும் அடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளார்.

மகளின் இந்த வேகமான பாய்ச்சலை மனத்துக்குள் பாராட்டியபடி எட்ட நின்று ரசித்துக்கொண்டிருக்கிறார் தந்தை கமல்ஹாசன்.

குறிப்புச் சொற்கள்