சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பிப்ரவரி 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சிவகார்த்திகேயன் தமது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
அதை முன்னிட்டு, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ படம் குறித்த அறிவிப்பு திங்கட்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. அப்படத்தின் ‘டீசர்’ காணொளி வெளியானது.
காணொளியில் சிவகார்த்திகேயனின் வேடம், வசனம் என அனைத்துக்குமே இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இப்படத்தில் அருள்தாஸ், பால சரவணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். படத்தின் நாயகியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தை ராஜ்கமல் நிறுவனமும் ‘டர்மரிக்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
குறுகியகாலத் தயாரிப்பாக இப்படத்தை உருவாக்கி, அக்டோபரில் வெளியீடு காணும் என்று படக்குழு இப்போதே அறிவித்துள்ளது.
அக்டோபர் 16ஆம் தேத முதல் தொடங்கும் நீண்ட விடுமுறையை ‘சேயோன்’ குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


