சூர்யாவுடன் இணையும் சிம்பு

சூர்யாவுடன் இணையும் சிம்பு

1 mins read
578a6a9d-fea3-4e41-b1b5-258a811110b9
சூர்யா, சிம்பு. - படங்கள்: தினமலர்
Google News Preferred Icon

சூர்யாவின் 47வது படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் நஸ்ரியா நாயகியாக நடிக்கிறார்.

‘ஆவேசம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

கதையின் இறுதிப்பகுதியில் சில காட்சிகள் மட்டுமே வந்துபோகும் ஒரு கதாபாத்திரம் மிக சுவாரசியமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் பல நாள்களாக விவாதித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சிம்பு பொருத்தமாக இருப்பார் என்று நஸ்ரியாதான் யோசனை தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜித்து மாதவன் உடனடியாக சிம்புவைத் தொடர்புகொண்டு பேச, அவரும், ‘அதற்கென்ன.. நடித்தால் போயிற்று’ என்று தேதி ஒதுக்கியுள்ளாராம்.

முன்னதாக, இப்படத்தில் நடிக்க சிம்பு மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், இப்போது படக்குழு கேட்டதைவிடக் கூடுதல் நாள்கள் சிம்பு ஒதுக்கியிருப்பதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்