சிம்புவுக்கு இரண்டு நாயகிகள்

சிம்புவுக்கு இரண்டு நாயகிகள்

1 mins read
e0f7ba55-27f7-4a6d-9a9b-8976fea135d2
மீனாட்சி சௌத்ரி, மிருணாள் தாக்கூர். - படங்கள்: சமயம் தெலகு.
multi-img1 of 2
Google News Preferred Icon

‘டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சிம்பு நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.

சிம்பு நடிப்பதாக வெளியான பல அறிவிப்புகள் வெறும் தகவலாகவே போய்விட்டன. எந்த அறிவிப்பும் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.

ஆனால் அஸ்வத், சிம்பு படத்தின் படப்பிடிப்பு குறித்த தேதியில் தொடங்கும் என இயக்குநர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க மிருணாள் தாக்கூரிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். இன்னொரு பக்கம் மீனாட்சி சௌத்ரியிடமும் பேசியுள்ளனர். இருவரில் யாரேனும் ஒருவர் நாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மிருணாள் நடிப்பது உறுதியாகிவிட்டது. ஆனால், கதைப்படி சிம்புவுக்கு இரண்டு நாயகிகள் என்றும் மீனாட்சியும் நடிப்பார் என்றும் புதுத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிம்புதிரைப்படம்இயக்குநர்நடிகை