மனவலியால் தவித்த சில்க் ஸ்மிதா: நடிகர் ஆனந்த்ராஜ்

மனவலியால் தவித்த சில்க் ஸ்மிதா: நடிகர் ஆனந்த்ராஜ்

1 mins read
184aee65-c6ab-4553-8fe3-23569e82660a
சில்க் ஸ்மிதா, ஆனந்த்ராஜ். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

நடிகை சில்க் ஸ்மிதா தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பு, மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்ததாக நடிகர் ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.

அவரது மன வலிக்கு என்ன காரணம் என்பது திரையுலகத்தினருக்கு நன்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“சில்க் ஸ்மிதா எனக்கு நல்ல தோழியாக இருந்தார். இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளோம். அவர, உயிரை மாய்த்துக்கொள்ள மன அழுத்தம்தான் காரணம்.

“அவர் இறந்து போவதற்கு முந்திய நாள்கூட இருவரும் இணைந்து ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாடியிருந்தோம். மறுநாள் அவர் இறந்துவிட்டதாக தகவல் அறிந்தபோது கடும் அதிர்ச்சிக்கு ஆளானேன்.

“தாங்கிக்கொள்ள முடியாத அளவு ஏற்பட்ட மன வலியால் அவர் தவித்தார். அவர் உயிருடன் இருந்திருந்தால் இப்போது வரை நடித்துக் கொண்டிருந்திருப்பார்,” என்று ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
நடிகர்நடிகைஉயிரிழப்பு