இன்ஸ்டகிராமை கலக்கும் நடிகை ஷ்ரத்தா கபூர்

1 mins read
395f6dd6-b92e-47b9-b904-c61a47b67cb8
ஷ்ரத்தா கபூர். - படம்: சமூக ஊடகம்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ‘சாஹோ’ படத்தில் பிரபாசுக்கு நாயகியாக நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா கபூர்.

இந்தியிலும் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார் ஷ்ரத்தா.

இவர் தற்போது ‘ஸ்ட்ரீ 2’ படத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

தற்போது, இந்திய அளவில் அதிக நபர்களால் ‘இன்ஸ்டகிராம்’ பக்கத்தில் பின்தொடரப்படும் இந்திய பிரபலங்களின் பட்டியலில் நடிகை ஷ்ரத்தா 3வது இடத்தை பிடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3வது இடத்தில் இருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இந்திய அளவில் அதிகம் பின்தொடர்பவர்களின் பட்டியலில் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி (270 மில்லியன்) முதல் இடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா (91.8 மில்லியன்) உள்ளார். தற்போது ஷ்ரத்தா கபூர் (91.6 மில்லியன்) மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

நான்காவது இடத்தில் நரேந்திர மோடி (91.3 மில்லியன்) உள்ளார்.

குறிப்புச் சொற்கள்