இரு வாரங்களில் மின்னும்: ‘துருவ நட்சத்திரம்’ குறித்து கௌதம் மேனன்

இரு வாரங்களில் மின்னும்: ‘துருவ நட்சத்திரம்’ குறித்து கௌதம் மேனன்

1 mins read
a526b204-3fa0-422e-95e7-8e4c45456537
‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: கேரளா9.காம்
Google News Preferred Icon

இதோ வருகிறது, அதோ வரப்போகிறது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியாவதாகத் தெரியவில்லை.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த இப்படம், நீண்ட காலமாக பல பிரச்சினைகளால் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில், இறுதிக்கட்ட சவால்களைச் சந்தித்து வருவதாகவும் அவற்றின் முடிவில் படம் வெளியாகும் என்றும் விகடன் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கௌதம் மேனன்.

அடுத்த இரு வாரங்களுக்குள் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க முடியும் என நம்புகிறாராம். இந்தப் படம் வெளியான பிறகு புதுப்படங்களை இயக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

“விக்ரம் நடிப்பில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படம் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

நிதிச் சிக்கல்கள் காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீடு தாமதமானது. அனைத்தையும் சமாளிக்க சில ஆண்டுகளாகிவிட்டன.

“வேறு படங்களை இயக்க வாய்ப்புகள் தேடி வருகின்றன. ஆனால் எந்த வாய்ப்பும் எனக்கு சுவாரசியமாகத் தெரியவில்லை. இந்தப் படம் வெளியாக வேண்டும் என்பதால்தான் வேறு படங்களை இயக்கவில்லை,” என்று கூறியுள்ளார் கௌதம் மேனன்.

கௌதம் மேனன் இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘மின்னலே’ படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்