கேரவனில் ரகசிய கேமரா: ராதிகா குற்றச்சாட்டு

கேரவனில் ரகசிய கேமரா: ராதிகா குற்றச்சாட்டு

2 mins read
4d5818fa-87de-4882-8098-02b5c1c91073
ராதிகா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

கேரவனில் நடிகைகள் உடை மாற்றுவதை வெளியில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ராதிகா.

ஹேமா அறிக்கை மூலம் வெளியான பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாளத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

சினிமாத் துறையில் உள்ள பலரும் இந்த விவகாரம் தொடர்பாக குரல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை ராதிகா சரத்குமார் கேரவனில் ரகசிய கேமராவை வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்து ரசிப்பதாக அதிர்ச்சியானத் தகவலை தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக மலையாள தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், “நடிகைகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது என்பது மலையாள சினிமாவில் மட்டுமில்லை, தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து துறைகளிலும் உள்ளது.

மலையாளப் படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது, அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு கைத்தொலைப்பேசியைப் பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.

நான் அதைப்பார்த்துவிட்டு கடந்து சென்று விட்டேன். பிறகு அதுகுறித்து விசாரித்த போதுதான், அவர்கள் கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது எனக்குத் தெரிந்தது. இதனால், நான் பயந்து போய் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று உடையை மாற்றினேன்.

இது குறித்து சக நடிகைகளுக்கும் சொல்லி எச்சரித்தேன். அது எந்த படப்பிடிப்பு என்று நான் சொல்ல விரும்பவில்லை. இங்கு சினிமாவில் எதுவும் சரியாக இல்லை,” என்று கூறியிருக்கிறார்.

ராதிகா சொன்ன இந்த அதிர்ச்சித் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்புச் சொற்கள்