குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்கும் சாய் பல்லவி

குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்கும் சாய் பல்லவி

1 mins read
3ea4ab6e-6882-43af-b30c-c9b4271c714a
ஓய்வு நேரத்தைக் குடும்பத்துடன் செலவழிக்கும் சாய் பல்லவி - படம்: தினமணி
Google News Preferred Icon

நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்தினருடன் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களைப் பதிவு செய்து இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். இந்தக் காணொளி இணையத்தில் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

சாய் பல்லவி, தனது குடும்பத்தினருடன் இருக்கும் காட்சிகளைப் பதிவிட்டு, தனது வாழ்வில் அவர்கள் இருப்பதால் அந்தப் பருவம் ‘அழகானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர், தனது பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் சகோதரியுடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய வெளியீட்டில், “என் டெலிலா! நீ இருக்கும்போதுதான் எனக்கு வசந்தம். எங்கள் வாழ்க்கையை அழகாக்கியதற்கு நன்றி,” என்று கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, அதன் மூலம் பிரபலமடைந்து, சினிமா பயணத்தைத் தொடங்கிய சாய் பல்லவி, 2015ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான ‘பிரேமம்’ மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து ‘மாரி 2’, ‘பாவக் கதைகள்’, ‘அமரன்’, ‘தாண்டேல்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது ‘ரெளடி பேபி’ பாடல் யூடியூப்பில் 100 கோடி பார்வைகளை எட்டிய முதல் தென்னிந்தியக் காணொளிப் பாடலாகும்.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்திசாய் பல்லவி

தொடர்புடைய செய்திகள்