திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும்: சாய் பல்லவி

திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும்: சாய் பல்லவி

1 mins read
7b1d3a77-7f63-44c8-be4d-237e142a8a89
சாய் பல்லவி. - படம்: கல்ட்
Google News Preferred Icon

‘துரந்தர்’ படத்தின் வெற்றியை அடுத்து, ரன்வீர் சிங் நடிக்கும் ‘ராமாயண்’ இந்திப் படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

படத்தின் முதல் பாகம் எதிர்வரும் தீபாவளி பண்டிகையின்போது வெளியாகும் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.

இதையடுத்து, மும்பையில் நடைபெற்று வரும் இப்படத்தின் பின்னணிக்குரல் பதிவுப் பணிகளில் பங்கேற்றுள்ளார் படத்தின் நாயகி சாய் பல்லவி.

இதில் ராமனாக ரன்வீரும் ராவணனாக ‘கேஜிஎஃப்’ பட நாயகன் யஷ்ஷும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

அனைத்துக் கதாபாத்திரங்களும் சொந்தக்குரலில் பேசினால்தான் நன்றாக இருக்கும் என இயக்குநர் நிதேஷ் திவாரி கூற, மற்ற அனைவரையும்விட சாய் பல்லவிதான் இதற்கு உற்சாகத்துடன் முன்வந்தாராம்.

ஏற்கெனவே இந்தியில் இதற்கு முன் அமீர்கான் மகன் ஜுனைத் கானுடன் இணைந்து நடித்த படத்திற்கு சரியாக வரவேற்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருந்த சாய் பல்லவி, சீதை கதாபாத்திரம் தனது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறார்.

இப்படத்திற்கான அவரது உழைப்பு தம்மை வியக்கவைப்பதாகப் படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி பாராட்டுகிறார்.

குறிப்புச் சொற்கள்