ரஜினியின் அடுத்த படத்துக்கு யார் இயக்குநர் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், இசையமைக்கப்போவது சாய் அபயங்கர் என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.
ரஜினியின் 173வது படத்தை அவரது நண்பர் கமல்ஹாசன் தயாரிக்க, சுந்தர்.சி இயக்குவார் என்று தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென அந்தப் படத்தில் இருந்து சுந்தர்.சி விலகிவிட்டார். இதையடுத்து புது இயக்குநர் யார் என கேள்வி எழுந்துள்ளது.
பல்வேறு இயக்குநர்களின் பெயர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியானாலும் எதுவும் தயாரிப்புத் தரப்பால் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், ரஜினியின் புதுப் படத்துக்கும் அனிருத்தான் இசையமைப்பார் எனக் கூறப்பட்டது.
ஆனால் எதிர்பாராத திருப்பமாக, சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தையடுத்து சிம்பு படத்துக்கு இசையமைக்கிறார் சாய்.
இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் தேதி அன்று ரஜினியின் பிறந்தநாள் வருவதால் அன்றைய தினம் அவரது அடுத்த படம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

