கயாது லோகருடன் நடனமாடிய சாய் அபயங்கர்

கயாது லோகருடன் நடனமாடிய சாய் அபயங்கர்

1 mins read
d355c4c9-e75b-4d4e-8b46-0470cf54f846
சாய் அபயங்கர், கயாது லோகர். - படம்: தினமலர்
Google News Preferred Icon

அனிருத்துக்கு அடுத்து யார் என்ற கேள்விக்கே இடமில்லை. இன்றைய தேதியில் இளையர்களின் விருப்பமான இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார் சாய் அபயங்கர்.

சூர்யா, தனுஷ் எனப் பல முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் சாய் அபயங்கர், தனது பாடல்களை அறிமுகப்படுத்தும் விதம் திரையுலகத்தினரை வெகுவாகக் கவர்ந்துவருகிறது.

ஏற்கெனவே இவரது இசைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு நடிகைகள் சம்யுக்தா, பிரீத்தி முகுந்தன், மீனாட்சி சௌத்ரி, சான்வி மேக்னா ஆகியோருடன் நடனமாடியிருந்தார் சாய்.

இந்த வரிசையில் கயாது லோகருடனும் இணைந்துள்ளாராம்.

சாய் அபயங்கர் புதிதாக இசையமைத்துப் பாடியுள்ள ஒரு பாடல் மார்ச் 5ஆம் தேதி‌ வெளியாகிறது. இந்தப் பாடலுக்காகத்தான் ‘டிராகன்’ பட நாயகி கயாதுவுடன் அவர் இணைந்து நடனமாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்