மகாராணி எசுபாய் வேடத்தில் ராஷ்மிகா

மகாராணி எசுபாய் வேடத்தில் ராஷ்மிகா

1 mins read
ff122c6a-c9a8-4397-9577-6f0951e58f8f
விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் வந்த ராஷ்மிகா மந்தனா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

நடிகை ராஷ்மிகா மந்தனா நேற்று பெங்களூரு விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் வந்ததைப் பார்த்த ரசிகர்கள் கவலையடைந்தனர்.

‘புஷ்பா- 2’ படத்தை அடுத்து இந்தியில் ‘சாவா’, ‘சிக்கந்தர்’, ‘தமா’ மற்றும் தெலுங்கில் ‘குபேரா’, ‘தி கேர்ள் பிரண்ட்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். விக்கி கவுசலுக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கும் ‘சாவா’ என்ற இந்தி படம் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகிறது. லக்ஷ்மன் உடேகர் என்பவர் இயக்கி உள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

மராட்டிய மன்னன் சாம்பாஜியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்கி கவுசல் மகாராஜா சாம்பாஜியாக நடிக்க, மகாராணி எசுபாய் என்ற வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

அந்தப் படத்தில் இருந்து அவரது இரண்டு சுவரொட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் ராஷ்மிகா கழுத்து நிறைய நகை அணிந்து பட்டு புடவை கட்டி, சிரித்த முகத்துடனும் மற்றொன்றில் கோபத்துடன் நிற்பது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளது.

இவர் அண்மையில் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும்போது காலில் அடிபட்டது. அதற்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அதனால் அவர் தற்பொழுது செல்லும் இடங்களுக்கு சக்கர நாற்காலியில் சென்று வருகிறார். நேற்று அவர் பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்தபோதும் சக்கர நாற்காலியில் வந்ததால் ரசிகர்கள் கவலைக்குள்ளானார்கள். இதுகுறித்த காணொளி தற்பொழுது வலைத்தளங்களில் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்