கூகல் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரகுமான்

கூகல் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரகுமான்

1 mins read
05d1130e-6d74-4b0a-b9b8-fe29e8cae6ba
ஏ.ஆர். ரகுமான் - கோப்புப் படம்: ஊடகம்
Google News Preferred Icon

தமிழ் சினிமாவையும் தாண்டி உலக அளவில் பீடு நடை போடுபவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற அனைத்துலக விருதுகளையும் வென்ற அவர் தற்காலிகமாக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தனது இசையில் பல புதுமைகளை செய்து வருகிறார். அந்த வகையில் எதிர்கால தொழில்நுட்பமாக பார்க்கப்படும் ஏஐ தொழில்நுட்பத்திலும் அவர் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளார். கூகல் நிறுவனத்தின் கிளவுட் உடன் இணைந்து ஏஐ தொழில்நுட்பத்தில் இசைக்குழுவை அமைக்கிறார் ரஹ்மான். இதற்கு ‛சீக்ரெட் மவுண்டன்’ என பெயரிட்டுள்ளார். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதை சொல்லும் பாணியில் இந்த இசை ஆல்பம் இருக்குமாம். வியோ 3, இமேஜென், ஜெமினி பிளாஷ், ஜெமினி 2.5 ப்ரோ ஆகியவற்றை இந்த திட்டத்தில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

‛‛இது கலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட மனிதர்களின் முழுமையான கொண்டாட்டமாக இருக்கும்,’’ என்று ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்