‘உன் பார்வையில்’ என்ற படத்தில், பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார் பார்வதி நாயர்.
அவருடன் மகேந்திரன், கணேஷ் வெங்கட்ராமன், ‘நிழல்கள்’ ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தன் கணவரும் சகோதரியும் மர்மமான முறையில் இறந்து போவதையடுத்து, உண்மையைத் தேடிப் புறப்படுகிறார் நாயகி. அவரது பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா என்பதுதான் இப்படத்தின் கதை.
“பார்வையற்ற பெண்ணாக நடிப்பது சவாலாக இருந்தது. மேலும், அவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களை நினைக்கும்போது மனம் வேதனைப்பட்டது,” என்று கூறியுள்ளார் பார்வதி நாயர்.

