அதிரடி வேண்டாம்; மென்மைதான் பிடிக்கும்: ஸ்ரீலீலா

அதிரடி வேண்டாம்; மென்மைதான் பிடிக்கும்: ஸ்ரீலீலா

1 mins read
261db322-fbd8-4536-b654-070e28d53cb1
ஸ்ரீலீலா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

நடிகை ஸ்ரீலீலாவை இயற்கை, இசைப் பிரியை எனத் தயங்காமல் குறிப்பிடலாம்.

பல படங்களில் ஒற்றைப் பாடலுக்கு குத்தாட்டம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும் தனக்கு அதிரடியான குத்துப் பாடல்கள் அறவே பிடிக்காது என்கிறார் ஸ்ரீலீலா.

“இதுதான் உண்மை. எனக்கு மென்மையான ‘மெலடி’ பாடல்கள்தான் பிடிக்கும். அதிலும் உருக்கமான காதல் பாடல்கள் என்றால் மிகவும் ரசித்துக் கேட்பேன்.

“ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழித்ததும் முதல் வேலையாக பழைய தெலுங்குப் பாடல்களைத்தான் கேட்பேன். அந்தப் பாடல்கள்தான் இன்று வரை எத்தகைய பரபரப்பான சூழலிலும் என்னை அமைதிப்படுத்துகின்றன,” என்று சொல்லும் ஸ்ரீலீலா, தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்