அடுத்த நட்சத்திர காதல் ஜோடி

அடுத்த நட்சத்திர காதல் ஜோடி

1 mins read
a552d766-59f2-48cf-92b5-82986b3aeeea
தெலுங்கு நடிகர்களான வைஷ்ணவ் தேஜ், ரித்து வர்மா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தெலுங்குத் திரையில் மீண்டும் ஒரு காதல் ஜோடி உருவாகியுள்ளது.

திரைத்துறையில் காதலும் பிரிவும் சர்வ சாதாரணம். ஒரு காதல் பற்றி கேள்விப்பட்டால் அடுத்து ஏதோ ஒரு பிரிவு பற்றியும் செய்திகள் வரும். தற்போது வந்துள்ளது ஒரு காதல் செய்தி.

2020ல் வெளிவந்து வெற்றி பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரித்து வர்மா. விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.

அவருக்கும் தெலுங்கு நடிகரான வைஷ்ணவ் தேஜ் என்பவருக்கும் காதல் என கிசுகிசு பரவி வருகிறது. தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் சகோதரி மகன்தான் வைஷ்ணவ் தேஜ். ‘உப்பெனா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர்.

ரித்து, வைஷ்ணவ் இருவரும் இணைந்து நடித்ததில்லை என்றாலும் அவர்கள் வெளியில் சந்தித்து தங்களது நட்பை வளர்த்துக் கொண்டார்கள் என்கிறார்கள். அந்த நட்பு தற்போது காதலாக மாறியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்தக் காதல் திருமணத்தில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்