இளையராஜா, சஞ்சய் கூட்டணியில் புதிய இசைத்தொகுப்பு

இளையராஜா, சஞ்சய் கூட்டணியில் புதிய இசைத்தொகுப்பு

1 mins read
82d9479b-3166-4c0f-aca3-4535297079ff
இளையராஜாவுடன் சஞ்சய் சுப்ரமண்யம் - படம்: எக்ஸ் பக்கம்/சஞ்சய் சுப்ரமண்யம்
Google News Preferred Icon

ஏதாவது ஒருவகையில் இசைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த வண்ணம் உள்ளார் இளையராஜா.

சிம்ஃபொனி மூலம் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், அடுத்து கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்ரமண்யத்துடன் இணைந்துள்ளார்.

இந்த இசைக்கூட்டணி ஆன்மிக அன்பர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் வகையில் ஓர் இசைப் படைப்பை உருவாக்கியுள்ளது.

இருவரும் இணைந்து திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாணியில் 30 பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடல்கள் அனைத்தையும் எழுதியிருப்பவர் இளையராஜா. சஞ்சய், இசை அமைத்துப் பாடியுள்ளார். அனைத்துப் பாடல்களும் பதிவு செய்யப்பட்டுவிட்டன. விரைவில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

கர்நாடக இசையுலகில் இந்த இசைத்தொகுப்பு குறித்து இப்போதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதனிடையே, இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பையும் இளையராஜாவே விரைவில் வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.

இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ், தன் வீட்டிலேயே அதற்கான ஒப்பனையுடன் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்