மூன்று விருதுகள்: உற்சாகக் கடலில் நீந்தும் நயன்தாரா

மூன்று விருதுகள்: உற்சாகக் கடலில் நீந்தும் நயன்தாரா

1 mins read
a0d8a534-2832-4da5-b8b2-dffd45a1c589
நயன்தாரா. - படம்: இந்தியா டுடே
Google News Preferred Icon

ஒரே சமயத்தில் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளதால் உற்சாகக் கடலில் நீந்திக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.

அண்மையில் தமிழக அரசு சார்பாக திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘அறம்’ படத்தில் மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்த நயன்தாராவுக்கு சிறந்த நடிக்கைக்கான விருது கிடைத்துள்ளது.

இந்த விழாவில் நயன்தாரா போன்றே, சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால், நயன்தாரா வரவில்லை.

இந்நிலையில், இவரது ‘ரவுடி பிக்சர்ஸ்’ தயாரிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’ ஆகிய படங்களுக்கும் விருதுகள் கிடைத்துள்ளன.

இதையடுத்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டுள்ளார் நயன்தாரா.

அதில், தமக்கு விருது கிடைக்க காரணமாக இருந்த படக்குழுவினருக்கு தன் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

“மூன்று மாநில விருதுகளை ஒரே சமயத்தில் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையில் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்,” என்று கூறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.

குறிப்புச் சொற்கள்