வருங்காலக் கணவர் குறித்த மீனாட்சியின் கனவு

வருங்காலக் கணவர் குறித்த மீனாட்சியின் கனவு

1 mins read
6535080b-c5a0-4b87-b7c2-48f14965552d
மீனாட்சி சௌத்ரி. - படம்: சினிஜோஷ்
Google News Preferred Icon

தமது வருங்காலக் கணவருக்கு குறைந்தபட்சம் நூறு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்கிறார் மீனாட்சி சௌத்ரி.

சொந்த நிலத்தில் விவசாயம் பார்க்க வேண்டும் என்பதும் அதில் விளையும் காய்கனிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் இவரது வாழ்நாள் லட்சியங்களில் ஒன்றாம்.

தம் கணவருக்கு நன்றாகச் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அண்மை நேர்காணல் ஒன்றில் இவர் குறிப்பிட்டுள்ளார்.

துணி துவைப்பது, தேய்ப்பது என்பன போன்ற வீட்டுவேலைகள் அனைத்துமே தெரிந்தவராக இருக்க வேண்டும் என்றும் அத்தகைய ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார் மீனாட்சி சௌத்ரி.

தமிழ், தெலுங்கு மொழிகளில் ஓரளவு வாய்ப்புகள் பெற்று வந்தாலும், எத்தகைய நாள்கள் திரைத்துறையில் தாக்குப்பிடிக்க முடியும் எனும் ஐயம் மீனாட்சியின் நலவிரும்பிகளுக்கு வந்துவிட்டதாம். அதனால், விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறு அவரைக் கட்டாயப்படுத்துகிறார்களாம்.

ஆனால், திரையுலகில் சாதிக்க தனக்கென்று சில இலக்குகளை வகுத்துள்ளதால், அவற்றை அடையும் வரை திருமண வாழ்க்கை குறித்து யோசிக்க முடியாது என்கிறார் மீனாட்சி.

குறிப்புச் சொற்கள்