சென்னையில் குடியேற விரும்பும் மீனாட்சி சௌத்ரி

சென்னையில் குடியேற விரும்பும் மீனாட்சி சௌத்ரி

1 mins read
237ddda2-89b8-4bf3-88ad-61c59d3e2ad9
மீனாட்சி சௌத்ரி. - படம்: சியாசத்.காம்
Google News Preferred Icon

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சென்னையில்தான் கொண்டாடியுள்ளார் மீனாட்சி சௌத்ரி.

நவீன் பொலிஷெட்டியுடன் இவர் நடித்துள்ள தெலுங்குப் படம் பொங்கலையொட்டி வெளியாகிறது.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தைப் பார்த்துவிட்டு சென்னையில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய பின்னர் மதுரை சென்று மீனாட்சி அம்மனை வழிபடுவதே இவரது திட்டமாக இருந்துள்ளது. ஆனால், ‘ஜனநாயகன்’ பட வெளியீடு தள்ளிப்போனதால் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகிவிட்டதாகப் புலம்புகிறார்.

எதிர்காலத்தில் சென்னையில் நிரந்தரமாக குடியேறுவதுதான் மீனாட்சியின் திட்டம். சென்னையில் அவருக்கு மிகவும் பிடித்தமான மூன்று பகுதிகள் உள்ளனவாம். அவற்றுள் எந்தப் பகுதியில் குடியேறுவார் எனத் தெரியவில்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

“ஹரியானாவில் வாழ்ந்தாலும் நான் ஒரு வங்காளப் பெண்‌. வங்காளி மக்களும் பொங்கல் வைப்பார்கள். பூசையின்போது கரும்பு மட்டும் இடம்பெறாது,” என்கிறார் மீனாட்சி சௌத்ரி.

குறிப்புச் சொற்கள்