உடல்நலம் குறித்து மம்முட்டி உருக்கம்

உடல்நலம் குறித்து மம்முட்டி உருக்கம்

1 mins read
b740f4ea-bade-4235-9ed4-ff7fd08c3dff
74 வயதானாலும் இளமை மாறாமல் தற்போதுள்ள கதாநாயகர்களுக்கு மம்முட்டி போட்டி கொடுத்து வருகிறார்.  - படம்: எக்ஸ்/மம்முட்டி

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்முட்டி. 74 வயதானாலும் இளமை மாறாமல் தற்போதுள்ள கதாநாயகர்களுக்கு அவர் போட்டி கொடுத்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலத்துக்கான சிகிச்சைகள் எடுத்து, தற்போது மீண்டும் படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார் மம்முட்டி.

அண்மையில் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், தமது உடல்நலம் பற்றிப் பேசினார்.

“கண் பார்வையும் கேட்கும் திறனும்தான் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானவை. சுவாசமும்கூட, சிலருக்குச் சுவாசிக்க முடிந்தாலும் வாசனையை உணர முடியாமல்கூட இருக்கும். எனக்கு நீண்டகாலமாக வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல் இருந்தது,” என்றார் மம்முட்டி.

“எதனையும் என்னால் நுகர முடியவில்லை. இப்போதுதான் அது மெதுவாகத் திரும்பி வருகிறது. ஒரு விஷயத்தை நாம் இழக்கும்போதுதான் அதன் மதிப்பை உணர்கிறோம்,” என்று அவர் உருக்கமாகப் பேசினார்.

மம்முட்டி தற்போது இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ‘பேட்ரியாட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் மோகன்லால், ஃபஹத் பாசில், நயன்தாரா, ராஜீவ் மேனன், ரேவதி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

குறிப்புச் சொற்கள்