கத்திச் சண்டையால் தூங்க முடியாமல் அவதிப்பட்ட மதுபாலா

கத்திச் சண்டையால் தூங்க முடியாமல் அவதிப்பட்ட மதுபாலா

1 mins read
e618181d-9144-417a-a627-9bf2e17dcdf5
நடிகை மதுபாலா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

‘கண்ணப்பா’ என்ற பான் இந்தியா படம் வரும் ஜூன் 27ஆம் தேதி வெளியீடாக உள்ளது. இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ், அக்‌ஷய் குமார், மதுபாலா, சரத்குமார், மோகன் பாபு, காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன், சம்பத் ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள மதுபாலா கூறுகையில், மோகன் பாபுவுடன் இப்படத்தில் நடித்துவிட்டேன். அதேபோல், 35 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லாலுடனும் இணைந்து நடித்துள்ளேன். அக்‌ஷய் குமாரின் இந்திப் படங்களில் நடித்த நான், இதில் அவருடனும் இணைந்து நடித்துவிட்டேன்.

“கதாசிரியர், தயாரிப்பாளர் என்று திறம்பட பணியாற்றிய விஷ்ணு மஞ்சு, கண்ணப்பா வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

“இளம் அம்மா என்ற எனது தோற்றத்தை உடைத்து, போர் வீராங்கனை என்ற புதிய பிம்பத்தை இப்படம் எனக்குக் கொடுத்துள்ளது.

“நமக்குப் பலர் மீது கோபம் இருக்கும். அதையெல்லாம் வெளிப்படுத்த முடியாது.

“இந்தப் படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சியின்மூலம் எனது கோபத்தை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்தது.

“ஒரு கத்தியை என்னிடம் கொடுத்துத் தாக்கும்படி சொன்னதும், எதிரே வந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்தேன்.

“அதிக எடை கொண்ட கத்தியைத் தூக்குவது சிரமமாக இருந்ததால், கைகளில் கடுமையான வலி ஏற்பட்டு தூங்கமுடியாமல் அவதிப்பட்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்