‘லெஜண்ட்’ சரவணன் நடிக்கும் ‘லீடர்’

‘லெஜண்ட்’ சரவணன் நடிக்கும் ‘லீடர்’

1 mins read
c82e3557-0489-4c7e-a09a-6961ef4e3828
‘லெஜண்ட்’ சரவணன். - படம்: மாலைமலர்
Google News Preferred Icon

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தொழிலதிபர் ‘லெஜண்ட்’ சரவணன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘லீடர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்படத்தின் முதல் சுவரொட்டியையும் வெளியிட்டனர்.

இதையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது படக்குழுவினரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

“ரஜினி, விஜய் ஆகியோர்கூட ‘லீடர்’ என்ற படத்தில் நடித்ததில்லை. அரசியலிலும் இல்லாத நீங்கள் இப்படியோர் தேர்வு செய்திருக்கிறீர்களே?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அவர்கள் இருவருக்கும் கிடைக்காததால்தான் எனக்கு இந்தத் தலைப்பு கிடைத்தது என நினைக்கிறேன்,” என்றார் சரவணன்.

இப்படத்தின் முதல் பாடல் வரும் 14ஆம் தேதி அன்பர் தினத்தன்று வெளியாகிறது. ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இதில் ஆண்ட்ரியா, விடிவி கணேஷ், ஷாம், லால் எனப் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்