ஜப்பானில் வெளியீடு காணும் ‘குபேரா’

ஜப்பானில் வெளியீடு காணும் ‘குபேரா’

1 mins read
43ea4e9d-8b0d-4375-9fce-c2eee37d29e1
‘குபேரா’ படச் சுவரொட்டி. - படம்: தி இந்து
Google News Preferred Icon

தனுஷ் நடிப்பில் உருவான ‘குபேரா’ படம் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெறவில்லை என்றாலும், ரூ.100 கோடி வசூலைக் கடந்து சாதித்தது.

சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் நாகார்ஜுனாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

சமுதாயத்தில் மதிப்புடன் வலம்வரும் சிலர், கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதும் அதற்குப் பிச்சைக்காரரான தனுஷை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதும்தான் இப்படத்தின் கதை. தமிழில் சுமாரான வெற்றியைப் பெற்ற இப்படத்துக்குத் தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், ஜப்பானில் இப்படத்தை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக தென்னிந்தியப் படங்களை ஜப்பானிய, சீன மொழிகளில் வெளியிடத் தயாரிப்பாளர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். அந்த வகையில் ‘புஷ்பா-2’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஜப்பானில் வெளியானது.

ஆனால், சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. ரூ.7 கோடி மட்டுமே வசூல் கண்டது. எனினும் ‘குபேரா’ படம் அதற்கும் அதிகமாக வசூல் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்