ரூ.200 கோடி எதிர்பார்க்கும் ‘கருப்பு’ படத் தயாரிப்பாளர்

ரூ.200 கோடி எதிர்பார்க்கும் ‘கருப்பு’ படத் தயாரிப்பாளர்

1 mins read
3360648d-f227-41de-b7cd-79537feb1786
சூர்யா. - படம்: எம்எஸ்என்
Google News Preferred Icon

‘கருப்பு’ படத்தின் வெளியீடு தாமதமாகி வரும் நிலையில், அதற்கான காரணம் குறித்து இப்போது தெரிய வந்துள்ளது.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை. இதனால் இப்படத்தின் வியாபாரம் கோடம்பாக்கத்தை வியப்பில் ஆழ்த்த வேண்டும் என்று அவர் விரும்புகிறாராம்.

இதேபோன்று படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவும் நினைத்துள்ளார்.

படத்தின் மொத்த விநியோக உரிமைக்கு ரூ.200 கோடியை விலையாக நிர்ணயித்துப் பல்வேறு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தத் தொகையை எட்ட முடியவில்லை.

படத்தின் ஓடிடி உரிமைக்கு ரூ.75 கோடி என விலை நிர்ணயம் செய்தாராம் தயாரிப்பாளர். ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை. இதையடுத்து, ரூ.10 கோடி ரூபாய் குறைத்துள்ளார்.

பேச்சுவார்த்தை நீடித்து வரும் நிலையில், மார்ச் 19ஆம் தேதி இப்படம் திரைகாணும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்