மீண்டும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’

மீண்டும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’

1 mins read
e536e28d-d05d-4f94-9683-8d032e7f4cd7
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

‘கில்லி’ படத்தின் மறுவெளியீடு மாபெரும் வெற்றியடைந்ததால், தற்போது பல படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், எதுவுமே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

தற்போது இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படம்.

தாணு தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’.

2000ஆம் ஆண்டில் மே 5ஆம் தேதி இப்படம் வெளியானது.

மம்முட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த அந்தப் படம் பல்வேறு விருதுகளை வென்றாலும், எதிர்பார்த்த வசூலை அப்போது ஈட்டவில்லை.

ஆனால், முதலுக்கு மோசமில்லை என்ற நிலையை எட்டியது. அந்தப் படத்தின் ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற பாடலுக்காகச் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது சங்கர் மகாதேவனுக்கு வழங்கப்பட்டது.

தற்போது காலத்துக்கு ஏற்றவகையில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட உள்ளது. விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்கவுள்ளது படக்குழு.

குறிப்புச் சொற்கள்