இணையத்தில் கசிந்தது ஜனநாயகன்; திரைத்துறையினர் கண்டனம்

கருத்துரைக்காத விஜய்; தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை

இணையத்தில் கசிந்தது ஜனநாயகன்; திரைத்துறையினர் கண்டனம்

2 mins read
d087e3f3-ed73-420c-bd7b-45624fe85bf7
ஜனநாயகன் படம் கசிந்ததற்கு எதிரான கண்டனங்களைப் பதிவிட்டுவரும் நிலையில், அந்தப் படத்தின் நாயகன் விஜய் இதுவரை அதுகுறித்து எதுவும் சொல்லவில்லை. - படம்: நியூஸ் பைட்ஸ்
multi-img1 of 3
Google News Preferred Icon

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை வாரி​யத்​தின் சான்​றிதழுக்​காக காத்​திருக்​கும் நிலை​யில், வியாழக்கிழமை (ஏப்ரல் 9) இணை​யத்​தில் வெளி​வந்ததால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்​துள்​ளது. நடவடிக்கை எடுக்​கக் கோரி காவல்துறையில் புகார் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

ரூ.500 கோடிக்கும் அதிகமான செலவில் தயாரிக்​கப்​பட்ட படம் என்​ப​தா​லும், தமிழகம், புதுச்​சேரி சட்​டமன்றத் தேர்​தலில் முதல்​முறை​யாக களமிறங்​கி​யுள்ள விஜய்​யின் கடைசி திரைப்​படம் என்று அறிவிக்​கப்​பட்​ட​தா​லும், ரசிகர்​கள் மத்​தி​யில் இத்​திரைப்​படம் பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தியிருந்தது.

பெரும் பொருட்செலவில் உருவான இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவான இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. - படம்: கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ்/பிபிசி

கருத்துரைக்காத விஜய்

இந்நிலையில், இணையத்தில் முழுத் திரைப்படத்தையும் சட்ட விரோதமாக வெளியிட்டதற்கு நடிகர் சங்க பொதுச் செய​லா​ளர் விஷால், நடிகர்​கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்​யா, சிரஞ்​சீ​வி, சிவ​கார்த்​தி​கேயன், விஜய் ஆண்​டனி, ஜீவா, ஜி.​வி.பிர​காஷ் குமார், உட்பட திரை​யுல​கினர் பலரும் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

எனினும், விஜய் இதுவரை ஒரு கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை. வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) பரப்புரை முடிந்து திருச்சி விமான நிலையம் வந்த விஜய்யிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோதுகூட அவர் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.

ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது விபத்து அல்ல. அது ஓர் அமைப்பு தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது என்று கமல் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது விபத்து அல்ல. அது ஓர் அமைப்பு தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது என்று கமல் தெரிவித்துள்ளார். - படம்: விகடன்

அமைப்பின் தோல்வி: கமல் கண்டனம்

“திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது,” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

“இது ஓர் அமைப்பு தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது,” என்று கமல் கூறியுள்ளார்.

“உரிய சட்ட நடைமுறைகள் சரியான நேரத்தில் பின்பற்றப்பட்டு இருந்தால் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டோம். சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், திருட்டுப் பிரதிகளுக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கின.

“சட்டபூர்வமான அணுகல் தடைபடும்போது, சட்டவிரோத நடவடிக்கைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

“பைரசி’ என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அது கலை, கலைஞர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்.

“நூற்றுக்கணக்கான கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்களின் உழைப்பையும், தயாரிப்பாளர்கள், சினிமா திரையரங்கு உரிமையாளர்கள், அவர்களின் முதலீடுகளையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது,” என்று கமல் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, “நம்முடைய படைப்புகளைப் பாதுகாப்பது எவ்வளவு கடினம் என்பதையும் நினைவுறுத்துகிறது. சினிமாவைக் காப்போம்,” எனப் பதிவிட்டுள்ளார்.

“திரைப்படக் குழுவுடன் இணைந்து நிற்குமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். படத்தைச் சரியான முறையில் பார்த்து ஆதரியுங்கள்,” என்று கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பகிர்வுச் சங்கிலியில் உள்ள அனைவர் மீதும் நடவடிக்கை

பகிர்வுச் சங்கிலியில் உள்ள அனைவர் மீதும் உரிமையியல், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய சர்ச்சை

இதற்கிடையே, ‘ஜனநாயகன்’ படத்தில் இஸ்லாமிய வெறுப்புக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

கேவிஎன் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

தொடக்கத்தில் முதல் 5 நிமிடக் காட்சிகள் மட்டுமே கசிந்தன. பின்னர், முழுத் திரைப்படமும் வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் எனப் பல்வேறு சமூக ஊடகங்களில் சட்டவிரோதமாகப் பதிவேற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்