‘ஜெயிலர் 2’ படத்தின் வெளியீடு குறித்து தீவிர ஆலோசனை

‘ஜெயிலர் 2’ படத்தின் வெளியீடு குறித்து தீவிர ஆலோசனை

2 mins read
ff9c6458-57b4-42bc-ba96-f11a7e057102
மீண்டும் ரஜினி - நெல்சன் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. - படம்: சன் பிக்சர்ஸ்
Google News Preferred Icon

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர்’.

அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்திருந்தார்.

‘ஜெயிலர்’ படம் ரூ.600 கோடி வரை வசூலாகி, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.

மீண்டும் ரஜினி - நெல்சன் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முதல் பாகத்தை போலவே இந்தப் படத்திலும் மோகன்லால், சிவ ராஜ்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி இசை, காட்சித் தொகுப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக இந்தத் திரைப்படம் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 8ஆம் தேதி வெளியிடுவது குறித்தும் படக்குழு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ரஜினி திரைப்படங்கள் பண்டிகைக் காலங்களில் வெளியாகும்போது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறுவது வழக்கம்.

இதனால் செப்டம்பர் வெளியீடா அல்லது தீபாவளி வெளியீடா என்பது குறித்து இறுதி முடிவைப் படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்