‘சொர்க்கவாசல்’ வெளியான பிறகு ‘கைதி-2’ கதையை மாற்றுவேன்: லோகேஷ் கனகராஜ்

‘சொர்க்கவாசல்’ வெளியான பிறகு ‘கைதி-2’ கதையை மாற்றுவேன்: லோகேஷ் கனகராஜ்

1 mins read
a8e200a6-9010-4058-80e3-5a2e6c8c65a1
லோகேஷ் கனகராஜ், ஆர்.ஜே.பாலாஜி, அனிருத். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்துள்ள படம் ‘சொர்க்கவாசல்’. அவருடன் சானியா ஐயப்பன், நட்டி நடராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, “இந்த ‘சொர்க்கவாசல்’ படத்தின் முன்னோட்டக் காட்சி நன்றாக இருக்கிறது. 6 மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் சில காட்சிகளை எனக்கு காண்பித்தார்கள். அந்தக் காட்சிகளில் ஆர்.ஜே.பாலாஜி மிக சிறப்பாக நடித்திருந்தார். அவர் ஒரு நல்ல நடிகராக உருவாகிவிட்டார் என்பதை அதன்மூலம் தெரிந்து கொண்டேன்.

“அதோடு, இந்த ‘சொர்க்கவாசல்’ படத்தில் சிறைக் காட்சிகள் நிறைய உள்ளன. அடுத்து நான் இயக்கப் போகும் ‘கைதி-2’ படத்திலும் சிறைக் காட்சிகள் உள்ளன. அதனால், இந்தப் படம் திரைக்கு வரும்போது அதைப் பார்த்துவிட்டு தேவைப்பட்டால் ‘கைதி-2’ கதையில் சில திருத்தங்களைச் செய்வேன்,” என்று சிரித்தபடியே கூறினார் லோகேஷ் கனகராஜ்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை