நடிகை லீலா உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்.
அவர் இந்தியில் நடித்த முதல் படம் ‘து மேரி ஜிந்தகி ஹை’. இதையடுத்து, இப்ராகிம் அலிகானுடன் இணைந்து ‘டைலர், ‘ஜூ மந்தர்’ ஆகிய படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார்.
தான் பாலிவூட்டில் நடித்த முதல் படம் வெளியாகும் முன்பே அடுத்தடுத்து புதுப்படங்களில் ஒப்பந்தமாவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் லீலா.
“இதற்கு முன்பு ‘புஷ்பா-2’ படத்தில் ‘கிச்சிக்’ பாடலுக்கு நான் ஆடிய நடனம்தான் இந்திய அளவில் என்னைக் கொண்டுபோய் சேர்த்தது. அதன் பிறகே இந்தியில் எனக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன,” என்று தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீலீலா.

