ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் இந்தி நடிகை அபேக்ஷாவும் இணைந்துள்ளார்.
‘பதாய் தோ’ உட்பட சில இந்திப் படங்களிலும் ‘ஹனிமூன் ஃபோகிராஃபர்’, ‘உண்டேகி’ உள்ளிட்ட இணையத் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
‘ஜெயிலர்-2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. அதனால் அபேக்ஷாவும் படக்குழுவுடன் இணைந்துள்ளார். அவரும் ரஜினியும் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா மேனன், சிவ்ராஜ் குமார் ஆகியோர் மீண்டும் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், மிதுன் சக்ரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா இருவரும் அண்மையில் இணைந்துள்ளனர்.

