மனம் உடைந்து போனேன்: ராஷ்மிகாவின் சோகப் பதிவு

மனம் உடைந்து போனேன்: ராஷ்மிகாவின் சோகப் பதிவு

1 mins read
b7da6bd2-0864-41e3-80a8-fcb9e69c4679
ராஷ்மிகா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தெலுங்கானா மாநில அரசை விமர்சனம் செய்யும் வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு 400 ஏக்கர் வனப்பகுதியை அழித்து, தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாம்.

இதைக் கண்டித்து மாணவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், ராஷ்மிகாவும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பப் பூங்கா குறித்த செய்தியைப் பார்த்து தாம் மனமுடைந்து போனதாகவும் அரசாங்கத்தின் இந்த முடிவு மிகவும் தவறானது என்றும் ராஷ்மிகா கூறியிருக்கிறார்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘சிக்கந்தர்’ நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது தனுஷுக்கு ஜோடியாக ‘குபேரா’ படத்திலும் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ராஷ்மிகாதெலுங்கானாதொழில்நுட்பப் பூங்காசுற்றுச்சூழல்