அரசியலில் களமிறங்கும் கௌதம் ராம் கார்த்திக்

அரசியலில் களமிறங்கும் கௌதம் ராம் கார்த்திக்

1 mins read
‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு
de5d5ab2-3ebc-48a4-8126-92242668e1f9
கௌதம் ராம் கார்த்திக். - படம்: இந்தியாடிவி
Google News Preferred Icon

தமிழ்த் திரையுலகில் வளர்ந்துவரும் இளம் நடிகரான கௌதம் ராம் கார்த்திக், வலுவான அரசியல் பின்னணி கொண்ட திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக்குக்கு ஜோடியாக அஞ்சனா நேத்ருன் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும், தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களும் பிரபல குணச்சித்திர நடிகர்களுமான செல்வராகவன், பி. வாசு, ஏ. வெங்கடேஷ், வ.ஐ.ச. ஜெயபாலன், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

நடிகர் கௌதம் கார்த்திக், ஆர்யாவுடன் இணைந்து நடித்த திகிலூட்டும் திரைப்படமான ‘மிஸ்டர் எக்ஸ்’, அண்மையில் திரையரங்குகளில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, அவர் தற்போது சூரியபிரதாப் இயக்கத்தில் ‘ரூட்’ என்ற அறிவியல் புனைகதை படத்திலும் சரத்குமாருடன் இணைந்து ‘கிரிமினல்’ என்ற திகிலூட்டும் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

மேலும் இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் அவர் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
அரசியல்திரைப்படம்இயக்குநர்படப்பிடிப்பு