வில்லன் நடிப்பு போதும்: எஸ்.ஜே.சூர்யா முடிவு

வில்லன் நடிப்பு போதும்: எஸ்.ஜே.சூர்யா முடிவு

1 mins read
c8b98610-de9e-4395-92b0-83cc39cc5ffa
எஸ்.ஜே.சூர்யா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

நீண்டகாலம் வில்லனாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்க முடியாது என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

ஒரு நடிகனாக தாம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வில்லனாக நடிப்பதற்காக நான் திரையுலகுக்கு வரவில்லை.

“தமிழ்த் திரையுலகுக்கு ஒரு எம்ஜிஆர் கிடைத்தது வரம். எனக்கு வாழ்க்கையில் பெரிய ஆசை ஒன்று உள்ளது. அது, இந்தியாவுக்கான எம்ஜிஆர் என்ற பெயர் எனக்குக் கிடைக்க வேண்டும்.

“அடுத்து ‘கில்லர்’ என்கிற படத்தை இயக்கி நடிக்கப் போகிறேன். என்னுடைய இயக்கத்தைப் பார்க்க ஆசைப்படுகிறவர்களுக்கு கண்டிப்பாக அது பிடிக்கும்,” என்று கூறியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

‘சூர்யாவின் சனிக்கிழமை’, ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த இவர், அண்மையில் வெளியான விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது இவர் பிரதீப் ரங்கநாதனுடன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, கார்த்தியுடன் ‘சர்தார் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்