‘திரிஷ்யம்’ கதைக்கு முற்றுப்புள்ளி!

‘திரிஷ்யம்’ கதைக்கு முற்றுப்புள்ளி!

1 mins read
75b8ed3a-a4d9-4c9c-b1cf-5fa0bebde78f
‘திரிஷ்யம்’ படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப்புடன் மோகன்லால். - படம்: சமயம்
Google News Preferred Icon

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘திரிஷ்யம்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தமிழில் கமலஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என இப்படம் மறுபதிப்பு செய்யப்பட்டது.

முதல் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகமும் தயாராகிவிட்டது. இதிலும் மோகன்லால், மீனாவும் இணைந்துள்ளனர். இப்படம் கோடை விடுமுறையில் வெளிவருகிறது.

நான்காம் பாகம் உருவாகுமா என இயக்குநர் ஜித்து ஜோசப்பிடம் கேட்டபோது, “மூன்றாம் பாகத்திற்குப் பிறகு கதையைத் தொடரும் எண்ணம் இல்லை. இதற்கு மேல் கதையை நீட்டித்தால் விறுவிறுப்பு குறைந்துவிடும். எனவே, மூன்றாம் பாகத்துடன் இக்கதை முடிவடைகிறது,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்