‘டான் 3’ விவ​காரம்: ரன்​வீர் சிங்குக்கு எதி​ரான தடை நீக்கம்

‘டான் 3’ விவ​காரம்: ரன்​வீர் சிங்குக்கு எதி​ரான தடை நீக்கம்

2 mins read
b59f3a2b-e57a-4d4b-b635-0bc63e103a46
ரன்​வீர் சிங் நடித்த ‘துரந்​தர்’ படத்தின் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்​ற​ன - படம்: ரன்​வீர் சிங்/ எக்ஸ்
Google News Preferred Icon

பிரபல பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங், இயக்குநர் மற்றும் நடிகரான பர்​ஹான் அக்​தரின் ‘டான் 3’ படத்​தில் நடிக்க இருந்​தார்.

படத்​துக்​கான முன் தயாரிப்பு பணிகள் நடை​பெற்று வந்த நிலை​யில் கடைசிக் கட்​டத்​தில் ரன்​வீர் சிங் அப்​படத்​தில் இருந்து வில​கி​னார்.

‘துரந்​தர்’ திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்​ற​தால் ரன்​வீர் சிங் ‘டான் 3’ படத்திலிருந்து வில​கிய​தாகக் கூறப்​பட்​டது.

அவர் வில​கிய​தால் ரூ.45 கோடி வரை இழப்பு ஏற்​பட்​ட​தாக தயாரிப்​பாளர் பர்​ஹான் அக்​தர், மேற்​கு இந்​தி​யத் திரைப்​படத் தொழிலா​ளர்​கள் கூட்டமைப்பில் புகார் அளித்​தார்.

அக்​கூட்​டமைப்​பு, ரன்​வீர் சிங் படங்​களுக்கு ஒத்​துழைப்பு வழங்​க​மாட்​டோம் என்று அறி​வித்​தது.

இது பரபரப்​பானதை அடுத்​து, திரைப்​படத் தொழிலா​ளர்​கள் கூட்டமைப்​புக்கு ரன்​வீர் சிங்கிற்கு வழக்கறிஞர் கடிதம் அனுப்​பி​னார்.

இதனைத் தொடர்ந்​து, தயாரிப்​பாளர்​கள் கூட்டமைப்பு, இந்​தி​யத் திரைப்பட தயாரிப்​பாளர்​கள் சங்​கம், திரைப்​படம் மற்​றும் சின்னத்​திரை கலைஞர்​கள் சங்​கம் உள்​ளிட்ட திரைத்​துறை அமைப்​பு​கள் தலை​யிட்​டுப் பேச்​சு​வார்த்தை நடத்​தின.

இதனால் ரன்​வீர் சிங் மீதான தடையை உடனடி​யாக மேற்​கு இந்​தி​யத் திரைப்படத் தொழிலா​ளர்​கள் கூட்​டமைப்பு திரும்​பப் பெற்றுள்ளது.

இவ்​வ​மைப்​பின் தலை​வர் பி.என்​.​தி​வாரி கூறும்​போது, “இந்த விஷயத்​தில் யாரும் வெற்றி பெறவில்​லை. அதே நேரம் தோற்​க​வும் இல்​லை. தயாரிப்​பாளர்​கள், இயக்​குநர்​கள் மற்​றும் நடிகர்​களுக்கு எந்​தப் பிரச்​சினை​யும் ஏற்​ப​டாத வண்​ணம், கலந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்​டும்,” என்று அவர் தெரிவித்​துள்​ளார்​.

இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான துரந்தர் படம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

படத்தின் இரண்டாம் பாகமான ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படம் கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. முதல் படத்தைப் போல இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்புச் சொற்கள்
சினிமாதடைதிரைச்செய்தி